V/Vavuniya Tamil Madhya M.V (National School)

  • Full Screen
  • Wide Screen
  • Narrow Screen
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Error
  • Folder doesn't exist or doesn't contain any images
E-mail Print
User Rating: / 0
PoorBest 

கெளரவிப்பு  விழா

எமது பாடசாலையின் பழைய மாணவனும் இயந்திரவியல் பொறியியலாளருமான  திரு.கனகேஸ்வரன் கனேஸ்வரன் என்ற இளைஞனின் உலக சாதனையைப் பாராட்டியும் உயர்தரப் பிரிவு மாணவன் செல்வன் சிவநாதன் கிந்துசன் இன் விளையாட்டுத்துறை சார்பான சாதனையைப் பாராட்டியும்  மற்றும் மாணவன் கிந்துசனை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் திரு.S.நவநீதன் அவர்களை பாராட்டியும் இன்றைய தினம் காலைப் பிராத்தனையின் போது அவர்களிற்கான கெளரவிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. 

திரு.கனகேஸ்வரன் கனேஸ்வரன் என்ற இளைஞனினால்  உலகில் அதிக நீளமான "நீள் மின்  இணைப்புப் பொருத்தி" தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனையாக பதிவிடப்பட்டுள்ளது. இந்த கின்னஸ் உலக சாதனையானது இலங்கையின் தனி ஒருவரால் நிகழ்த்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியான முதலாவது சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறையில் பல நெடுந்தூர ஓட்ட நிகழ்ச்சிகளில் தேசிய   சாதனைகளை நிலைநாட்டிய வரிசையில் எமது மாணவன் செல்வன் சிவநாதன் கிந்துசன் இந்த வருடம் இடம்பெற்ற மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப்போட்டியில் மேற்படி தூரத்தை 16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை நிலைநாட்டி உள்ளார். 

இம் மாணவர்களின் சாதனைகள் மேலும் மேலும் தொடர பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

You are here: